×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள்: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார்

ஆவடி: ஆவடி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில், முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை நாசர் எம்எல்ஏ வழங்கினார். திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த நாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடந்தது. அந்த வகையில், திருவள்ளுர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்பாட்டில், ஆவடி அடுத்த நடுக்குத்தகை ஊராட்சியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் பூங்காவில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு. நாசர் எம்எல்ஏ கலந்து கொண்டார். பின்னர், திமுக கொடியை ஏற்றி, முதியோர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதனை தொடர்ந்து, முதியோர்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கிய அவர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதேபோல், ஆவடி மாநகராட்சிகு உட்பட்ட 42வது வார்டில் திமுக கொடியேற்றி இனிப்பு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து, 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பெண்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்புகள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய திமுக செயலாளர் தேசிங்கு, ஆவடி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகர பொறுப்பாளர் சண் பிரகாஷ், மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி, மாவட்ட துணை செயலாளர் ஜெயபால், பொதுக்குழு உறுப்பினர் விமல் வர்ஷன், கிழக்கு பகுதி திமுக செயலாளர் பேபி சேகர், வடக்கு பகுதி செயலாளர் நாராயண பிரசாத் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி நகர திமுக : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பூந்தமல்லி நகர திமுக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு நகரச் செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். பூந்தமல்லியில் உள்ள 21 வார்டுகளிலும் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர். மேலும் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகர நிர்வாகிகள் பூவை தாஜுதீன், துரை பாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லி ராணி மலர்மன்னன், அசோக் குமார், புண்ணியகோட்டி, அன்பழகன், சவுந்தர்ராஜன், நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருவேற்காடு நகர திமுக சார்பில் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி தலைமையில் 18 வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் திமுக வட்டச் செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அய்யப்பன்தாங்கல் ஊராட்சி திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம் தலைமையில் அப்பகுதியில் உள்ள முதியோர் மற்றும் கருணை இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, ஊராட்சிமன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன், இளைஞரணி அமைப்பாளர் ஜனார்த்தனன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி சாமிநாதன், உஷா நந்தினி எத்திராஜ், மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன், கிளைச் செயலாளர் அஸ்வின் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

* திருவள்ளூர் பெரியகுப்பம் :
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.திலீபன் ஏற்பாட்டில் திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள அன்னை தெரேசா பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத, வாய் பேசாத மாணவ, மாணவிகளுக்கும், திருவள்ளூர் ஆயில்மில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே ஏழை, எளிய மக்களுக்கும் பிரியாணி, இனிப்பு மற்றும் கேக் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோரின் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த விழாவிற்கு நகர செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மோதிலால், புவனேஷ்குமார், நகர நிர்வாகிகள் கமலக்கண்ணன், ரவி பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், குப்பன், சீனிவாசன், சிவகுமார், பவளவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், முன்னாள் நகரமன்ற தலைவர் பொன் பாண்டியன் ஆகியோர் பிரியாணி, இனிப்பு மற்றும் கேக் வழங்கினர்.

இதில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆதிசேஷன், பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, ஒன்றியச் செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் விஜயகுமார், கோவிந்தம்மாள், நேதாஜி, மாவட்ட பிரதிநிதி கொப்பூர் திலீப்குமார், மோகனசுந்தரம், நந்தகுமார், விஜயகுமார், பாஸ்கர், வேளாங்கண்ணி, தமிழரசி உள்பட வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

* பொதுமக்களுக்கு அன்னதானம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கட்சிக் கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மூர்த்தி தலைமை தாங்கி கட்சிக்கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, கலை இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் ரவிக்குமார், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, அவைத் தலைவர் ரவிச்சந்திரன், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன்,

மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அப்புன், ராஜா, ஆத்துப்பாக்கம் வேலு, தொண்டரணி துணை அமைப்பாளர்கள் பார்த்திபன், தண்டலம் ரவி, முகமது மொய்தீன், ராஜா சந்திரசேகர், பாபு, சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள்: சா.மு.நாசர் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,H.M. ,Nasser MLA ,Aavadi ,Udayanidhi Stalin ,PM Nasser MLA ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...