×

எல்லாபுரம் அருகே மழைநீர் தேங்கி, புதர்மண்டி காணப்படும் அங்கன்வாடி: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் அருகே கிளாம்பாக்கத்தில் அங்கன்வாடி மையம் முன்பு மழைநீர் தேங்கி புதர்மண்டிக் காணப்படுகிறது. பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கிளாம்பாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2021 – 22ம் ஆண்டு ரூ.10 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இந்த கட்டிடத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த கட்டிடத்தை சுற்றி கோரை புற்கள் வளர்ந்து புதர்கள் மண்டியும், மையம் முன்பு மழைநீர் தேங்கி நின்று, சேறும் சகதியுமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் மாணவர்கள் மையத்திற்குள் செல்ல கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் பாம்பு, விஷப்பூச்சிகள் மறைந்திருந்தாலும் தெரியாது. அது மாணவர்களை தீண்டி விடுமோ என பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post எல்லாபுரம் அருகே மழைநீர் தேங்கி, புதர்மண்டி காணப்படும் அங்கன்வாடி: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Ellapuram ,Budharmandi ,Uthukkottai ,Anganwadi center ,Klambach ,Ellapuram Union ,Periyapalayam ,
× RELATED அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர்...