×

ஹர்திக்கை மும்பை வாங்கியதால் குஜராத் டைட்டன்சுக்கு ஷுப்மன் கில் கேப்டன்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 மற்றும் 2023 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ள நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்தன.

டைட்டன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவர் கேப்டனாக நீடிப்பதாக குஜராத் டைட்டன்ஸ் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனினும், வீரர்களை வர்த்தக முறையில் அணி மாற்றம் செய்வதற்கான அவகாசம் டிச.12 வரை இருந்ததால், எப்போது வேண்டுமானாலும் ஹர்திக் மீண்டும் மும்பை அணிக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவே ‘டீல்’ முடிந்ததால், டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாரை வார்ப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இதனால் குஜராத் அணியின் கையிருப்பு ₹15 கோடி அதிகரித்ததுடன் (ஹர்திக் சம்பளம்), டிரான்ஸ்பர் கட்டணமாக மும்பை அணி கொடுக்கும் தொகையும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. டிரான்ஸ்பர் தொகையில் 50 சதவீதம் பாண்டியாவுக்கு வழங்கப்படும். ஹர்திக் மும்பை அணிக்கு செல்வது உறுதியான நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் (24 வயது, பஞ்சாப்) நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பு ஏற்கிறார். 2018 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக அறிமுகமான கில், 2022 ஏலத்துக்கு முன்பாக விடுவிக்கப்பட்டார். அப்போது புதிய அணியான குஜராத் ₹7 கோடிக்கு கில்லை ஒப்பந்தம் செய்தது. 2022 தொடரில் 16 போட்டியில் 483 ரன் குவித்த கில், 2023 ஐபிஎல் சீசனில் 17 இன்னிங்சில் 890 ரன் குவித்து முதலிடம் பிடித்தார் (3 சதம்).

டைட்டன்ஸிடம் இருந்து ஹர்த்திக்கை வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு ₹17.25 கோடிக்கு ஏலம் எடுத்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விற்றுள்ளது.

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்
தக்கவைப்பு: கே.எல்.ராகுல், டி காக், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, கே.கவுதம், குருணால் பாண்டியா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரேரக் மன்கட், யுத்வீர் சிங், மார்க் வுட், மயாங்க் யாதவ், மோஷின் கான், ரவி பிஷ்னோய், யஷ் தாகூர், அமித் மிஷ்ரா, நவீன் உல் ஹக், தேவ்தத் படிக்கல் (வாங்கல்).
விடுவிப்பு: டேனியல் சாம்ஸ், கருண் நாயர், ஜெய்தேவ் உனத்கட், மனன் வோரா, கரண் ஷர்மா, சூர்யன்ஷ் ஷெட்கே, ஸ்வப்னில் சிங், அர்பித் குலேரியா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தக்கவைப்பு: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் அய்யர், ரகுமானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், ஜேசன் ராய், சுயாஷ் ஷர்மா, அனுகுல் ராய், ஆந்த்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
விடுவிப்பு: ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டேவிட் வைஸ், ஆர்யா தேசாய், என்.ஜெகதீசன், மன்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாகூர், லோக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தீ, ஜான்சன் சார்லஸ்.

பஞ்சாப் கிங்ஸ்
தக்கவைப்பு: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, அதர்வா டெய்ட், ஹர்பிரீத் சிங், ஷிவம் சிங், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், காகிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், ராகுல் சஹார், வித்வத் கவெரப்பா, லயம் லிவிங்ஸ்டன், ரிஷி தவான், சாம் கரன், சிக்கந்தர் ரஸா, ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங்.
விடுவிப்பு: பல்தேஜ் சிங், பானுகா ராஜபக்ச, மோகித் ரதீ, ராஜ் அங்கத் பவா, ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், குர்னூர் பிரார்.

டெல்லி கேப்பிடல்ஸ்
தக்கவைப்பு: ரிஷப் பன்ட், டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, யஷ் துல், அபிஷேக் போரெல், அக்சர் படேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், பிரவீன் துபே, விக்கி ஆஸ்வால், அன்ரிச் நோர்க்யா, குல்தீப் யாதவ், லுங்கி என்ஜிடி, கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார்.
விடுவிப்பு: ரைலீ ரூஸோ, சேத்தன் சகாரியா, ரோவ்மன் பாவெல், மணிஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்டாபிசுர் ரகுமான், கம்லேஷ் நாகர்கோட்டி, ரிபல் படேல், சர்பராஸ் கான், அமான் கான், பிரியம் கார்க்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்கவைப்பு: சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ரியான் பராக், டோனோவன் பெரேரா, குணால் ரத்தோர், ஆர்.அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, சந்தீப் ஷர்மா, டிரென்ட் போல்ட், யஜ்வேந்திர சாஹல், ஆடம் ஸம்பா, பிரசித் கிரிஷ்ணா.
விடுவிப்பு: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஸ்ட், குல்திப் யாதவ், ஒபெத் மெக்காய், எம்.அஷ்வின், கே.சி.கரியப்பா, கே.எம்.ஆசிப் (தேவ்தத் படிக்கல்லை விற்று ஆவேஷ் கானை வாங்கியுள்ளது).

The post ஹர்திக்கை மும்பை வாங்கியதால் குஜராத் டைட்டன்சுக்கு ஷுப்மன் கில் கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Shubman Gill ,Gujarat Titans ,Mumbai ,Hardik ,Ahmedabad ,IPL T20 ,Dinakaran ,
× RELATED ஜெய்ஸ்வால் அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா