×

பெண் பத்திரிகையாளரை பற்றி தரக்குறைவான விமர்சனம் மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர்: வழக்கு முடித்துவைப்பு

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கடந்த 2018ல் தரக்குறைவாக விமர்சித்து நடிகர் எஸ்.வி.சேகர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு ஆஜரான எஸ்.வி.சேகர் பதிவை நீக்கி விட்டதாகவும், மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், வழக்கை தொடர இருப்பதாக மனுதாரர் கோபால்சாமி தெரிவித்தார். இந்நிலையில், எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதை ஏற்பதாக மனுதாரரான கோபால்சாமி தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post பெண் பத்திரிகையாளரை பற்றி தரக்குறைவான விமர்சனம் மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர்: வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : S.V. Shekhar ,Chennai ,SV Shekhar ,
× RELATED பெண் பத்திரிகையாளர்கள் குறித்த...