×

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், சுங்குவார்சத்திரம் பஜாரில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலா தலைமை வகித்தார். திமுக நிர்வாகிகள் நாசர், ரவிச்சந்திரன், சந்தவேலூர் சத்யா, ஒன்றிய கவுன்சிலர் ஆண்டனி வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, ஸ்ரீபெரும்புதூர் பேரூர் செயலாளர் சதிஷ்குமார் தலைமை வகித்தார்.

பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், துணை தலைவர் இந்திராணி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Sunguarschatra ,Sriperumbudur ,Sriperumbudur North Union DMK ,Youth Secretary ,Udhayanidhi Stal ,Chungwarchatram ,Udhayanidhi Stalin ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...