×

கோவளத்தில் கடலோர கைப்பந்து போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கடலோர கைப்பந்து (பீச் வாலிபால்) போட்டி நேற்று கோவளத்தில் தொடங்கியது. இதில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் கலந்துகொண்டு, கடலோர கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தை சேர்ந்த 75 தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குகானந்தம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்செல்வன், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர், வடநெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுரங்கம், புனித ஜோசப் பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க தலைவர் பெலிக்ஸ் ஐசக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் செய்திருந்தார். இந்த போட்டிகள் இன்றும் நடைபெற உள்ளன.

The post கோவளத்தில் கடலோர கைப்பந்து போட்டி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kovalam ,Tiruporur ,Chengalpattu ,Kovalam Beach Volleyball Tournament ,Dinakaran ,
× RELATED மின் விளக்குகள் இல்லாத கேளம்பாக்கம் –...