×

கேரளா: பூரம் திருவிழாவின் போது யானைக்கு மதம் பிடித்து தாக்கியதில் பாகன் படுகாயம்

கேரளா: கேரளாவில் கோவில் பூரம் திருவிழாவின் போது யானைக்கு மதம் பிடித்து தாக்கியதில் பாகன் படுகாயமடைந்தார். திருச்சூரில் குன்னம் குளம் மாங்காடு கோவிலில் பூரம் திருவிழாவில் யானைகள் வரிசையாக நிறுத்தி வழிபாடு செய்யப்பட்டது.

பின்னர் யானை நெட்டி பட்டை அலங்கார பொருட்கள் அவிழ்க்கும் பொழுது கண்ணன் என்ற யானை பாகனை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பாகன் பாப்பன் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானையின் கோவம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் பூரம் திருவிழா நடைபெற்ற இடத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

The post கேரளா: பூரம் திருவிழாவின் போது யானைக்கு மதம் பிடித்து தாக்கியதில் பாகன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Pagan ,Pooram festival ,Puram festival ,Kunnam Pool ,Tiruchur ,Pagan Padukhayam ,
× RELATED மலப்புரத்தில் பாகனுக்கு...