×

கைம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வி.ஏ.ஓ. கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கைம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மனு அளிக்க சென்ற கைம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நல்லாபாளையம் வி.ஏ.ஓ. ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கைம்பெண்ணிடம் விதவை உதவித் தொகை பெற்று தருவதாக கூறி ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். இரவில் தொடர்ந்து செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததால் கண்டாச்சிபுரம் போலீசில் கைம்பெண் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

The post கைம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வி.ஏ.ஓ. கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kandachipuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது