×

இந்தியா, சீனா குடிமக்கள் விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு!

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு விசா இல்லாமல் வர இந்தியா, சீனா குடிமக்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். டிசம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த நடைமுறை மூலம் 30 நாட்கள் விசா இன்றி தங்க முடியும்.

மலேசியாவுக்கு விசா இல்லாமல் வர இந்தியா, சீனா குடிமக்களுக்கு அனுமதி அளித்து அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; “சீன தூதரகத்துடன் இணைந்து 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு வரும் டிசம்பர்1ம் தேதி முதல் 15 நாட்கள் வரை தங்க, இலவச விசா அனுமதியை சீனா அறிவித்தது. அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியாவுக்கு செல்பவர்கள் விசா அனுமதி பெறத் தேவையில்லை. சீனாவும் இந்தியாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது பெரிய மூலச் சந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த அறிவிப்பு ஏற்கனவே குற்ற வழக்குகளைக் கொண்டவர்களுக்கு பொருந்தாது. அவர்கள் விசா வாங்கிய பிறகே மலேசியாவுக்கு செல்ல முடியும். இது தொடர்பாக முழு விவரங்களை, உள்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார்” என கூறினார்.

மேலும் மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் வரலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஜனவரி – ஜூன் வரை மட்டும் 28 லட்சம் இந்தியர்களும், 4.98 லட்சம் சீனர்களும் அந்நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.

The post இந்தியா, சீனா குடிமக்கள் விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Kuala Lumpur ,Anwar Ibrahim ,India ,China ,Prime Minister of ,Dinakaran ,
× RELATED தட்பவெப்ப மாறுதலால் உடல்நிலை மோசம்...