×

கும்பகோணம்: கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கும்பகோணம்: கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கும்பகோணம் அருகே
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவரானவர் முருகன். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் அவரின் வீட்டில் இருந்தும் நண்பர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில் இன்று அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் முருகனை கைது செய்ததுடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைகளை தொடர்ந்து இவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post கும்பகோணம்: கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Kallapuliyur panchayat council ,Kallapuliyur ,panchayat council ,AIADMK ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்