×

திருவள்ளூர் நகர திமுக ஆலோசனை கூட்டம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர திமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர் மன்ற தலைவர் பொன் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். நகர துணை செயலாளர்கள் ரவி, பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், மாவட்ட பிரதிநிதி குப்பன், சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வழக்கறி அணி அமைப்பாளர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்ய விண்ணப்ப படிவங்களை வழங்கி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாபு, மிஸ்டர் தமிழ்நாடு திலீபன், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அயூப் அலி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர்மனோகரன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் வீனஸ், மகளிர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுளா குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெசிபி கேசவன் வார்டு செயலாளர் விஜயகுமார் மற்றும் 27 வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் பூத் கமிட்டி உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் பவளவண்ணன் நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 27ம் தேதி இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிப்பது, வாய் பேசாத, காது கேட்காத மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு பிரியாணி இனிப்பு மற்றும் சீருடைகள் வழங்குவது, ஏழை, எளியவர்களுக்கு வேட்டி, சேலை ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திருவள்ளூர் நகர திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur City DMK ,Tiruvallur ,Thiruvallur city ,DMK ,city DMK ,Dinakaran ,
× RELATED உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற...