×

ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தீர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதிநெருக்கடி காரணமாக அங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், அவர்களின் வாழ்விணையர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என 1000 பேர் உள்ளனர். அவர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க மாதம் ரூ.10.50 கோடி தேவைப்படும். ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேவையான அளவு நிதியை ஒதுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தீர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kamarasar University ,BAMA ,president ,Anbumani ,Chennai ,Madurai Kamarasar University ,
× RELATED சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் நிதி...