×

சாதாரண வார்டுக்கு விஜயகாந்த் மாற்றம்: விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 18ம் தேதி இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்த்துக்கு இடைவிடாத மார்பு சளியும், இருமலும் இருந்து வந்தது.

இந்நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. தற்போது விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது, இதனால் செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளது. அவர் இயற்கையாக சுவாசிக்கிறார், சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சாதாரண வார்டுக்கு விஜயகாந்த் மாற்றம்: விரைவில் வீடு திரும்புவார் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai ,DMDK ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் தனது பெயரில்...