×

இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தின் உயிர்நாடி அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி அரசியல் சுதந்திரத்தை பாஜ நசுக்குகிறது: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசு அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் அனைத்து சுதந்திரங்களையும் நசுக்குவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார். 74வது இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில், “இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் தருணத்தில் அதை உருவாக்கியவர்களுக்கு தலைவணங்குகிறோம். தற்போது ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜ அரசு அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி அரசியல் சாசனம் அளித்துள்ள அனைத்து சுதந்திரங்களையும், உரிமைகளையும் பறிக்கிறது. அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு துறையையும் தவறாக பயன்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பின் மீது திட்டமிட்ட, கடுமையான தாக்குதல்களை பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் செய்து வருகின்றன.

சர்வாதிகாரத்தை திணிக்கும் முயற்சியில் அரசு இயந்திரங்கள் சிப்பாய்கள் போல் பயன்படுத்தப்படுகின்றன. கருத்து வேறுபாடுகளே குற்றமாக்கப்படுகின்றன. நலிவடைந்த மக்களின் உரிமைகள், சமூகநீதி, நல்லிணக்கம் படிப்படியாக பறிக்கப்படுகின்றன. சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வை பரப்புகின்றன. இத்தகைய பிரிவினை, வெறுப்பு அரசியலை எதிர்த்து நிற்க வேண்டிய தருணமிது. ஜனநாயகத்தின் உயிர்நாடியான நமது அரசியலமைப்பு மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். இந்த போரில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் நின்று போராடி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

The post இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தின் உயிர்நாடி அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி அரசியல் சுதந்திரத்தை பாஜ நசுக்குகிறது: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,President ,Gharke ,New Delhi ,Mallikarjuna ,Union BJP government ,Kharge ,
× RELATED பாஜகவின் தேர்தல் சூழ்ச்சிகளில்...