![]()
மும்பை: கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு பாகிஸ்தானில் இருந்து படகுகளில் மும்பைக்கு வந்த 10 தீவிரவாதிகள் 3 நாட்கள் அதாவது நவம்பர் 29ம் தேதி வரை சிஎஸ்எம்டி ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உட்பட பல்வேறு இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 பாதுகாப்பு படையினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கும் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிர ஆளுனர் ரமேஷ் பைஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
The post மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி appeared first on Dinakaran.
