×

தீபத் திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை: தீபத் திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்றும் சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் வேலூர் வழியே இரவு 12.05க்கு திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் அதிகாலை 3.45க்கு புறப்பட்டு வேலூர் வழியே காலை 9 மணிக்கு கடற்கரை வந்து சேரும். வேலூர் கன்டோன்மென்ட், கனியாம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூரில் ரயில் நின்று செல்லும். அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீபத் திருவிழாவை ஒட்டி, திருவண்ணாமலைக்கு இன்றும் சிறப்பு ரயில்கள் இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,eve of the Deepat festival ,Chennai ,eve of ,Deepat festival ,of ,
× RELATED திருவண்ணாமலை பௌர்ணமி...