×

கட்டிடங்களுக்கு அனுமதியை விரைவுபடுத்த நடவடிக்கை

சேலம், நவ.26: சேலத்தில் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவதை தாமதம் ெசய்யாமல், விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், கட்டிடங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும், கட்டிட அனுமதி மற்றும் நில வகைப்பாடு மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாக பெற்று அனுமதி வழங்கப்படுகிறது.சேலத்தை பொறுத்தவரை, ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு, உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் அனுமதிக்கப்படுகிறது. மாதந்தோறும் சராசரியாக 30க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, அனுமதி ெபறுவதில் எந்தவித தாமதமும், முறைகேடுகளும் நடக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சேலத்தில் ஆன்லைன் நடைமுறையிலேயே, கடந்த சில மாதங்களாக அனுமதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், விரைவாக மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் பெறுவதிலும், கட்டிடங்களுக்கு அனுமதி பெறவும் முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளை கேட்கும்போது, அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post கட்டிடங்களுக்கு அனுமதியை விரைவுபடுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...