×

ஆலத்தூர் தாலுகாவில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

 

பாடாலூர், நவ.26: ஆலத்தூர் தாலுகாவில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி ஏகாம்பரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் செட்டிகுளம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், குரூர், மாவலிங்கை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

பாடாலூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. புதுக்குறிச்சி கிராமத்தில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

The post ஆலத்தூர் தாலுகாவில் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Alatur taluk ,Padalur ,Aladhur taluk ,Alathur taluk ,
× RELATED குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்க என்ன வழி?