×

திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் வாகனங்கள்

 

சத்தியமங்கலம், நவ.26: ஈரோடு சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  இப்பகுதியில் மக்காச்சோளம், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு காலிபிளவர், தக்காளி உள்ளிட்ட மலைக்காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அண்மையில், பெய்த மழையால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. இந்நிலையில், ஆசனூர் மலை பகுதியில் இன்று காலை முதலே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

ஆங்காங்கே மேக கூட்டங்கள் தரை இறங்கியது போல் பனி மூட்டம் நகர்ந்து சென்றது. மேலும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மஞ்சள் நிற முகப்பு விளக்கை எரிய விட்டபடி செல்கின்றனர்.
பனி விலகாததால் விவசாயப்பணிகள் மற்றும் கால்நடை மேய்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல் மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். பனிமூட்டத்தால் மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

The post திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Thimpam ,Sathyamangalam ,Asanur hills ,Erode ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...