×

நாளை தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு கூட்டம்

 

திருப்பூர், நவ.26: தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நாளை நடக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்சார நிலைக்கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 8ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், திருப்பூர் நடராஜ் தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு ரோட்டரி ஹாலில் நாளை (27ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் அனைத்து அமைப்பு தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் திருப்பூர் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post நாளை தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Industrial Electrical Consumers Federation ,Tirupur ,Industrial Consumers Association ,Industrial Power Consumer Federation ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்