×

ஆலுத்துபாளையத்தில் குடிநீர் விநியோக துவக்க விழா

 

பல்லடம், நவ.26: பல்லடம் அருகேயுள்ள ஆலுத்துப்பாளையத்தில் ஆழ்துளை கிணறு குடிநீர் விநியோக துவக்க விழா நேற்று நடைபெற்றது. பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூர் ஊராட்சி ஆலுத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி அன்பரசனிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவரது முயற்சியால் 15வது மானிய நிதிக்குழு நிதியில் ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் விஸ்தரிப்பு பணி செய்து குடிநீர் விநியோக துவக்க விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட பிரதிநிதி அன்பரசன் முன்னிலை வகித்தார். குடிநீர் விநியோகத்தை ஊராட்சி துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன் தொடக்கி வைத்தார். இவ்விழாவில் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலுத்துபாளையத்தில் குடிநீர் விநியோக துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : drinking water supply ,Aalutupalayam ,Palladam ,supply ,Aluthuppalayam ,Palladam… ,Inaugural Ceremony of Drinking Water Supply ,
× RELATED குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை...