×

2024-2025 பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும்: பொது சுகாதார குழுக்கள், மருத்துவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: கூடுதல் வருவாயை அதிகரிப்பதற்கு 2024-2025ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். சுகாதார வரி என்பது தெளிவான எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் புகையிலை போன்ற பொருட்களின் மீது விதிக்கப்படும் கலால் வரியாகும். சமீபத்திய ஆய்வின்படி கடந்த 10 ஆண்டுகளில் சிகரெட், பீடி மற்றும் புகையில்லா புகையிலை பொருட்கள் மலிவு விலையில் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் சிகரெட் மீதான தேசிய பேரிடர் தொகுப்பு வரிகளில் சிறிய அதிகரிப்பு மட்டுமே உள்ளதாகவும் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டதில் இருந்து புகையிலை மீதான வரிகளில் பெரிய அளவில் உயர்வு எதுவும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, அனைத்து புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிப்பது, ஒன்றிய அரசின் உடனடி வருவாயை உயர்த்துவதற்கான மிக பயனுள்ள கொள்கை நடவடிக்கையாக இருக்கும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

The post 2024-2025 பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும்: பொது சுகாதார குழுக்கள், மருத்துவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு