×

திருப்பதிக்கு வரும் பிரதமரின் பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி பலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்கான பாதுகாப்பு பணிக்காக ஆந்திரமாநிலம், கிருஷ்ணா மாவட்டம் பொருங்கி கிராமத்தை சேர்ந்த உளவுப்பிரிவு டிஎஸ்பி கிருபாகர்(59) திருப்பதி வந்தார். ஸ்ரீவாரி மெட்டு படிக்கட்டுகளில் ஏறி பார்வையிட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

The post திருப்பதிக்கு வரும் பிரதமரின் பாதுகாப்புக்கு வந்த டிஎஸ்பி பலி appeared first on Dinakaran.

Tags : DSP ,Tirupati ,Tirumala ,Modi ,Swami Swamy ,Tirupati Esumalayan Temple ,Andhra ,
× RELATED திருப்பதி தேவஸ்தானம் பங்களிப்பில் இலங்கையில் ஏழுமலையான் கோயில்