×

எம்கேபி. நகரில் பெட்டி கடையில் போதை பொருட்கள் விற்ற முதியவர், வாலிபர் சிக்கினர்

பெரம்பூர்: எம்கேபி. நகரில் பெட்டிக் கடையில் குட்கா விற்பனை செய்த முதியவர், வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை எம்கேபி. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகருக்கு தகவல் கிடைத்ததால், வியாசர்பாடி சாஸ்திரி நகர் முதல் தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அந்த பெட்டி கடையில் இருந்து 75 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்த பெரிய கருப்பனை (70) கைது செய்தனர்.

பாரதி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையை போலீசார் சோதனை நடத்தி 15பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்து வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த குமாரை (30) கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எம்கேபி. நகரில் பெட்டி கடையில் போதை பொருட்கள் விற்ற முதியவர், வாலிபர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : MKP ,Perambur ,Dinakaran ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி