×

கிருமாம்பாக்கம் ஓடையில் `நீர் நாய்’ வீடியோ வைரல்- பரபரப்பு

பாகூர் : பாகூர் ஏரியில் இருந்து கலிங்கல்ஓடை கிருமாம்பாக்கம் வழியாக சென்று பனித்திட்டு கடற்கரை வரை நீண்டு கடலில் கலக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி, அந்த ஓடையில் வழிந்து வருகிறது. அதிலிருந்து தப்பிய மீன்கள், ஓடையில் அதிகமாக செல்வதாக தெரிகிறது.
இந்நிலையில், ஓடையில், குறிப்பாக கடலூர்- பாண்டி சாலை தனியார் மருத்துவமனை எதிரே இரண்டு நீர் நாய்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்து விளையாடி வந்துள்ளது. மேலும் அவை, ஓடையில் வரும் மீன்களை லாவகமாக பிடித்து தின்றுள்ளது.

இதனை அவ்வழியாக ரோந்து சென்ற கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் அதை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுவரை இதேபகுதியில் நீர் நாயை யாரும் பார்த்ததில்லை. வனப்பகுதியில் நீர்நிலைகளில் மட்டும் காணப்படும், இது போன்ற விலங்குகள் முதல் தடவையாக கிருமாம்பாக்கம் ஓடையில் காணப்படுவது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கிருமாம்பாக்கம் ஓடையில் `நீர் நாய்’ வீடியோ வைரல்- பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : LAKE ,Dinakaran ,
× RELATED யானை நடமாட்டத்தால் கொடைக்கானல்...