×

கடையநல்லூர் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிக்கு நிதியுதவி

கடையநல்லூர், நவ.25: கடையநல்லூர் அருகே இடைகாலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒன்றிய பிரதிநிதிக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை நேரில் சந்தித்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இடைகாலை சேர்ந்த திமுக ஒன்றிய பிரதிநிதி மாரியப்பன். இவர் கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை நேரில் சந்தித்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் இடைகால் முத்துராமலிங்கம், கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் முகையதீன் கனி, நகர துணை செயலாளர் காசி, முருகானந்தம், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜாகிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கடையநல்லூர் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிக்கு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Kadyanallur ,Dimuka ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் தாக்குதலில்...