×

ஐ.டி.ஐ., துணைதேர்வுக்கு ஹால் டிக்கெட் வௌியீடு

சேலம், நவ.25: தேசிய ெதாழிற்பயிற்சி குழுமம் (என்சிவிடி) சார்பில், ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழிற் தகுதித்தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, டிசம்பர்-2023 துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் துணைத்தேர்வுக்கான தேர்வு அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் என்சிவிடி இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளது. துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகள் www.ncvt.mis.com என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஐ.டி.ஐ., துணைதேர்வுக்கு ஹால் டிக்கெட் வௌியீடு appeared first on Dinakaran.

Tags : Salem ,National Council of Vocational Training ,NCVT ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்