×

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை

சென்னை: உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழை வாயில் முன்பாக தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டார். பின்னர் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் பேசியதாவது: வழக்காடும் மொழியை மாற்றி அமைக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதனை உடனடியாக அறிவிக்க வேண்டும் அதற்கு அனைத்து கட்சி ஆதரவும் இருக்கிறது. தமிழகத்தில் இதற்கென தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி முன் சமர்ப்பிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் மாநிலத்தின் பெயரை தான் உயர் நீதிமன்றத்திற்கு வைத்துள்ளார்கள். மாநில அரசு, மத்திய அரசும் செவி சாய்த்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இணைப்பு மொழி என்பது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும். இந்தி மொழியில் சட்டங்களை கொண்டு வர முடியாது. தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பது பாமக நிறுவனர் ராமதாஸ் 40 ஆண்டுகால கோரிக்கை, இதற்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து இதற்காக வலியுறுத்தினார்.

The post தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : PAMC ,Anbumani ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu High Court ,BAMA ,Dinakaran ,
× RELATED 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை எஸ்ஐ...