×

மகளிர் பிரிமியர் லீக் டி20: டிச.9ல் மும்பையில் ஏலம்

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் (டபுள்யு.பி.எல்) டி20 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம், மும்பையில் டிச.9ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. டபுள்யு.பி.எல் தொடரின் 2வது சீசன், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் (பிப். – மார்ச்) நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், 2வது இடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் களமிறங்க உள்ளன. இந்த நிலையில், 2வது சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம், மும்பையில் டிச.9ம் தேதி நடைபெறும் என கிரிகிகெட் வாரியம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணியும் தக்கவைத்த, விடுவித்த வீராங்கனைகள் விவரமும் வெளியாகி உள்ளது.

The post மகளிர் பிரிமியர் லீக் டி20: டிச.9ல் மும்பையில் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Women's Premier League T20 ,Mumbai ,Women's Premier League ,WPL ,BCCI ,Dinakaran ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக்: யுபி வாரியர்ஸ்...