×

மாஜி கடற்படை வீரர்கள் 8 பேருக்கு தூக்கு தண்டனை இந்தியாவின் மேல்முறையீடு கத்தார் நீதிமன்றம் ஏற்பு

புதுடெல்லி: கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கத்தாரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 8 இந்தியர்களுக்கும் கடந்த அக்டோபர் 26ம் தேதி கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மாஜி கடற்படை வீரர்கள் 8 பேருக்கு தூக்கு தண்டனை இந்தியாவின் மேல்முறையீடு கத்தார் நீதிமன்றம் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Qatar court ,India ,New Delhi ,ex ,Naval ,Qatar ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியில் திரிணாமுல்,...