புதுடெல்லி: சர்வதேச வழி செலுத்துதல் செயற்கைகோள் அமைப்பில், ஏற்படும் கோளாறுகள் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் குறுக்கீடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விமானநிலைய ஆணையத்துக்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய ஆணையத்துக்கு சிவில் விமான போக்குவரத்து துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விமானங்கள் இயங்குவதற்கு சர்வதேச வழி செலுத்துதல், செயற்கைகோள் அமை ப்பு(ஜிஎன்எஸ்எஸ்) முக்கியமானதாக உள்ளது. நவீன ஜெட் விமானங்கள் வழி செலுத்துதலுக்கு ஜிஎன்எஸ்எஸ்சை நம்பியுள்ளன.
விமானங்கள் வழக்கமான வழிசெலுத்துதல் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. அவை செயற்கை கோள் சமிக்ஞைகளின் உதவியின்றி ஒரு விமானத்தின் நிலையை கணக்கிட முடியும். கடந்த சில மாதங்களில் மத்திய கிழக்கு வான்வெளி பகுதியில் ஜிபிஎஸ் சிக்னலில் கோளாறு,சிக்னல் நெரிசல் ஏற்படுவதாக விமானிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரிக்க கடந்த மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜிஎன்எஸ்எஸ் அமைப்பில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அந்த குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. விமான சிக்னல் குறுக்கீடுகள் மற்றும் கோளாறுகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது குறித்து பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
The post மத்திய கிழக்கு நாடுகளில் விமானங்கள் பறக்கும் போது ஜிபிஎஸ் சிக்னலில் குறுக்கீடு appeared first on Dinakaran.