×

ரூ.94 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி

 

திருப்பூர், நவ.25: திருப்பூர் மாநகராட்சியில் 2 வது மண்டலத்தில், ரூ.94 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைப்பு பணிகளை மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி, 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 7 வது வார்டில் குருவாயூரப்பன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ளர் 12 சாலைகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24 ன் கீழ் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை 2 ம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தார்ச்சாலை இல்லாமல் இருந்த பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்து கொடுக்கும் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மேயர் தினேஷ்குமாருக்கும், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post ரூ.94 லட்சம் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Corporation ,Dinakaran ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்