×

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 26.11.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள பரணி மற்றும் மகா தீபத்திருவிழாவினை முன்னிட்டு, பார்வையில் காணும் ஆணையர் உத்தரவின்படி ஒருங்கிணைப்பாளர், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பு பணி அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே. ஒருங்கிணைப்பாளர், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்பு பணி அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற கீழ்காணும் திருக்கோயில் பணியாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதில், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

The post திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Karthika Deepa festival ,Tiruvannamalai Arunachaleswarar Temple ,Chennai ,Barani ,Maha Deepatri festival ,
× RELATED மார்த்தாண்டத்தில் பரபரப்பு கழிவு...