×

கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மணப்பாறையைச் சேர்ந்த மருத்துவர் வெங்கட்ராமன் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக்கடன் வட்டியாக சேர்க்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மாணவர் கல்விக் கடன் விவகாரத்தில் உரிய மானிய தொகையை செலுத்த, அறிவுரை வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Union Human Resource Development Ministry ,Manaparai ,ICourt branch ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்கள் இடமாறுதலை தண்டனையாக...