×

முதல் ஆட்டத்திலேயே ரிங்குசிங் சூப்பர்: இஷான்கிஷன் பாராட்டு


விசாகப்பட்டினம்: ஆஸி. அணிக்கு எதிரான வெற்றி குறித்து இந்திய வீரர் இஷான் கிஷன்,கூறுகையில், நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் பந்து வீச்சிலும் கடும் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டோம். எனினும் முகேஷ் குமார் பந்துவீச்சில் கலக்கினார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். குறிப்பாக ரிங்கு சிங் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே மிகப்பெரிய அணியை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடிவிட்டார். சூர்யகுமார் யாதவுக்கு தான் முழு பாராட்டும் செல்ல வேண்டும். அவர் இந்த ஆட்டத்தில் விளையாடிய விதம் அசத்தலாக இருந்தது.

அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒவ்வொரு பவுலரையும் சிறப்பாக எதிர் கொண்டு அடித்தார். ஒவ்வொரு ஓவரிலும் 15 ரன்கள் வீதம் அடிக்க வேண்டும் என நினைத்தோம். நான் அவுட் ஆன பந்தில் ஒரு தவறு நடந்தது. ஏனென்றால் அந்த பந்தில் சூர்யகுமார் யாதவ், என்னை சிங்கிள் தான் எடுக்க சொன்னார். ஆனால் நான் பெரிய ஷார்ட் அடித்து அவுட் ஆகி விட்டேன். எங்களுடைய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் தவறு செய்வோம். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் வருவோம்’’ என்றார்.

The post முதல் ஆட்டத்திலேயே ரிங்குசிங் சூப்பர்: இஷான்கிஷன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ringuxing Super ,Ishankishan ,Visakhapatnam ,Aussie ,Ishan Kishan ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினம் கல்வி நிறுவனத்தில்...