×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழைகால நடவடிக்கையை கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம், நவ.24: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பகுதியில் மழைக்கால நடவடிக்கைகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல், மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து மழைநீர் தேங்காத வண்ணம் கண்காணித்திட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டதுடன், மருத்துவ பயன்பாட்டிற்குள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வையிட்டார். பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண்காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார், மனோஜ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மழைகால நடவடிக்கையை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Government Hospital ,Ramanathapuram ,Vishnu Chandran ,Ramanathapuram Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்:...