×

தேசிய நூலக வாரவிழாவில் விருது பெற்ற நூலகர்களுக்கு பாராட்டு

 

திருப்பூர், நவ.24: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு, மாவட்ட மைய நூலகம், கிளை நூலகம் எண்-2 மற்றும் கிளை நூலகம் எண்-3 ஆகியவை சார்பில் 56வது தேசிய நூலக வார விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. மைய நூலகர் தர்மராஜ் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் சன்னாசிப்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர் நாகராஜ், ‘நூலகமும் ஒரு கல்விக்கூடம்’ என்கிற தலைப்பில் பேசினார்.

‘நூலகமும், நூலகரும்’ என்கிற தலைப்பில் முனைவர் ரங்கசாமி சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசினார். ஸ்ரீதரன், வாசகர் வட்டத் தலைவர்கள் புருஷோத்தமன், தங்கவேல், ஆரோக்கியசாமி மற்றும் தெய்வசிகாமணி, மோகன்ராம், நூலகர்கள் சரவணன், ஜெயராஜ், நடராஜன், பொன்மணி, முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் ரங்கநாதன், மாவட்ட மைய நூலகத்தின் 2ம் நிலை நூலகர் தர்மராஜ், கே.ஆண்டிபாளையம் ஊர்ப்புற நூலகர் கலைச்செல்வன் ஆகியோர் விருது பெற்ற நூலகர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசினர். நிறைவில் நூலகர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

The post தேசிய நூலக வாரவிழாவில் விருது பெற்ற நூலகர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : National Library Week ,Tirupur ,Tamil Nadu Government Public Library ,Tirupur District Library Commission ,District Central Library ,
× RELATED திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு