×

திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி: 20 தையல் போடப்பட்டு சிகிச்சை

பெரம்பூர்: திருவிக நகர் காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரவள்ளூர் கே.சி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (25). இவர் மீது திரு.வி.க நகர், பெரவள்ளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ரவுடி பிரிவிலும் உள்ளார். இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக இமானுவேலை திரு.வி.க நகர் போலீசார் தேடி வந்தனர்.

இந்த தகவலை அறிந்த இமானுவேல் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் போதையில் திரு.வி.க நகர் காவல் நிலையத்திற்கு வந்து, ‘என் மீது பொய் வழக்கு போட்டு, என்னை கைது செய்ய பார்க்கிறீர்களா’ என்று கூறி தனது கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்து மற்றும் கையில் சரமாரியாக அறுத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சயடைந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளிட்ட போலீசார் இமானுவேலை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுமார் 20 தையல்கள் போடப்பட்ட நிலையில் இமானுவேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து ரவுடி தற்கொலை முயற்சி: 20 தையல் போடப்பட்டு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Mr. ,VK Nagar police station ,Perambur ,Tiruvik Nagar police ,station ,
× RELATED சிறையில் இருந்து வந்த மறுநாளே...