×

பேசின் பிரிட்ஜ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், நகை திருட்டு

பெரம்பூர்: பேசின் பிரிட்ஜ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், நகை திருடிச் சென்றனர். புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியை சேர்ந்தவர் பார்வதி (58). இவரது கணவர் முனியாண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், பார்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர், செங்கல்பட்டில் உள்ள தனது மகள்களை பார்ப்பதற்காக சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டின் பக்கத்தில் வசிக்கும் நபர்கள் பார்வதிக்கு போன் செய்து, உங்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதன்பேரில், உடனடியாக செங்கல்பட்டில் இருந்து பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் அரை சவரன் நகை திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பார்வதி புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பேசின் பிரிட்ஜ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம், நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Basin Bridge ,Perambur ,Tamarindo KP Park ,Dinakaran ,
× RELATED புளியந்தோப்பு பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் அதிரடி கைது