×

73 வயது முதியவருக்கு சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை வெற்றி: காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை: நீண்டகால நீரிழிவு மற்றும் அதிக ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உட்பட பல்வேறு காரணிகளினால், 60 வயதை கடந்த முதியோர்களுக்கு செய்யப்படும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள், சிக்கல் நிறைந்ததாகவே பொதுவாக கருதப்படுகின்றன. இந்நிலையில் 73 வயதான முதியவருக்கு நீண்டகாலத்திற்கு டயாலிசிஸ் செய்வதன் மூலம் சிகிச்சையளிக்கலாம் என்ற யோசனையை நிராகரித்த முதியவரின் மகன், சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை செய்ய கோரிக்கை வைத்தார். இதை தொடர்ந்து, சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை செய்வதற்கான முயற்சிகளை எடுக்க அவரின் குடும்பம் முடிவு செய்தது.

இந்நிலையில் நோயாளியின் 63 வயதான மனைவி, தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தார். அதை தொடர்ந்து இந்த உறுப்புமாற்று சிகிச்சை துல்லியமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பிரவு காஞ்சி கூறுகையில், வெற்றிகரமான சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை மருத்துவ உலகம் வென்றிருக்கும் சிறப்பான முன்னேற்றத்திற்கு ஒரு சாட்சி. வயது முதிர்ந்த நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் மன உறுதிக்கும், தைரியத்திற்கும் மற்றும் தளராத மனதுடன் செய்யப்பட்ட விவேகமான முடிவுக்கும் சான்றாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post 73 வயது முதியவருக்கு சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை வெற்றி: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,Chennai ,
× RELATED காவேரி மருத்துவமனை சாதனை 4 வயது...