×

அசாமில் ராணுவ முகாம் அருகே குண்டுவெடிப்பு

டின்சுகியா: அசாமில் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் வீரர்கள் யாருக்கும் காயமேற்படவில்லை. அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமின் நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் மாலை கையெறி குண்டு வெடித்து சிதறியது. இரண்டு பைக்கில் வந்த நபர்கள் முகாமிற்குள் கையெறி குண்டை வீசுவதற்கு முயற்சித்தனர். ஆனால் அது வெளியே விழுந்து வெடித்து சிதறியது. எனினும் இதில் யாரும் காயமடையவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post அசாமில் ராணுவ முகாம் அருகே குண்டுவெடிப்பு appeared first on Dinakaran.

Tags : Blast ,Assam ,Tinsukia ,Dinsukia ,Dinakaran ,
× RELATED கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து...