×

ஹலால் பொருட்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தல்

பாட்னா: ஹலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு பீகார் அரசு தடை விதிக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் வேண்டுகோள் விடுத்தார். ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்டை மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹலால் சான்று அளிக்கப்படும் உணவு பொருட்களுக்கு தடை செய்துள்ளார். அதே போன்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹலால் சான்று என்பது மொகலாயர் ஆட்சியின் போது முஸ்லிம் அல்லாதோருக்கு விதிக்கப்பட்ட ஜிஸியா வரி போல் ஆனது. ஹலால் பொருட்கள் விற்பனை செய்வது என்பது ஷரியா நடைமுறைகளை கொண்டுவருவதற்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ பதிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post ஹலால் பொருட்களை தடை செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union minister ,Patna ,Bihar government ,Giriraj ,Dinakaran ,
× RELATED 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர்...