×

அரசு பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகளை அகற்ற வேண்டும்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளி கழிவறைகள் ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து, இடித்து அகற்றம் செய்து வரும் 28ம்தேதிக்குள் புகைப்படத்துடன் அறிக்கையாக தொகுத்து வழங்க, சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களை பொறுப்பாக்கப்படுகிறது. மேற்படி கிராம ஊராட்சிகளில் ஆய்வின்போது பயன்பாடற்ற நிலையில் உள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

The post அரசு பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalachelvi Mohan ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 இடங்களில்...