×

தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது: புதுச்சேரி அரசு

சென்னை: தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. தருமபுரம் ஆதீனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அறிக்கையை ஏற்று தருமபுரம் ஆதினம் தரப்பு தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் தருமபுரம் ஆதினத்தின் கட்டுப்பாட்டில் மனு உள்ளது. தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் கோயில் உள்ள நிலையில் சனிப்பெயர்ச்சி விழா நடத்த குழு அமைத்ததாக புகார் எழுந்துள்ளது.

The post தருமபுரம் ஆதினத்தை கலந்தாலோசித்தே திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது: புதுச்சேரி அரசு appeared first on Dinakaran.

Tags : Thirunallaru Temple Snow Festival ,Aditnath ,Tarumapuram ,Government of Puducherry ,Chennai ,Thirunallaru Temple Sanitation Festival ,Darumapuram Aditnath ,Darumapuram Adenam ,Thirunallaru Temple Chantiphurshi Festival ,Darumapuram ,Aditnath: ,
× RELATED ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...