×

அமைச்சர் உதயநிதி மீது அவதூறு: பாஜக பிரமுகர் அதிரடி கைது

சாத்தான்குளம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் எட்வர்ட் ராஜதுரை (47). இவர் பாஜக முன்னாள் சிறுபான்மை அணி மாவட்ட செயலாளராக இருந்தவர். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவர் வாட்ஸ் அப் குழு நடத்தி வந்துள்ளார். மேலும் அந்த வாட்ஸ் அப் குழுவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து கடந்த 21ம்தேதியன்று ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ பொதுமக்கள் மட்டுமில்லாமல் திமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அவதூறு வாட்ஸ்அப் பதிவு குறித்து சாத்தான்குளம் நகர திமுக துணைச் செயலாளர் வெள்ளபாண்டியன்(73) சாத்தான்குளம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சாத்தான்குளம் போலீசார் எட்வர்ட் ராஜதுரை மீது அவதூறாக பேசுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் எட்வர்ட் ராஜதுரையை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நெஞ்சுவலி என தெரிவித்தால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த பின் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post அமைச்சர் உதயநிதி மீது அவதூறு: பாஜக பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Minister ,BJP ,Chatankulam ,Udhayanidhi Stalin ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை...