×

தமாகா எந்த கூட்டணியிலும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி


திண்டுக்கல்: தமிழ் மாநில காங்கிரஸ் எந்த கூட்டணியிலும் இல்லையென அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகி இல்ல விழாவிற்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் இன்று காலை கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிகவும் யாருடனும் கூட்டணி கிடையாது. திமுக கூட்டணி என்று தமிழகத்தில் இருக்கிறது. அகில இந்திய அளவில் இந்தியா என்ற கூட்டணி உள்ளது.

மற்ற கூட்டணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நாங்கள் ஜனவரி மாதம் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நட்பு கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமாகா எந்த கூட்டணியிலும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamaka ,GK Vasan ,Dindigul ,Tamil State Congress ,G.K. Vasan ,Dinakaran ,
× RELATED தமாகா யாருடன் கூட்டணி: ஜி.கே.வாசன் தகவல்