×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கான டிக்கெட் நாளை முதல் விற்பனை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது பரணி தீபம் மற்றும் மகா தீபத்தைக்காண 1,600பேருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நாளை தொடங்க உள்ளது. காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் காலை 6 மணிக்கு மகா தீபத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100பேர், ரூ.500 கட்டணத்தில் 1,000பேருக்கு அனுமதி எனவும் அனுமதி சீட்டுக்களை www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணையதளத்தில் நாளை காலை 10மணி முதல் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கான டிக்கெட் நாளை முதல் விற்பனை! appeared first on Dinakaran.

Tags : Parani ,Maha Deepa Darshan ,Tiruvannamalai Deepatri Festival ,Tiruvannamalai ,Bharani ,Tiruvannamalai Deepa festival ,Bharani Deepam ,Thiruvannamalai Deepa festival ,
× RELATED தென்காசி பரணி சில்க்ஸ் சார்பில் பாதிக்கு பாதி தள்ளுபடி விற்பனை