×

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் குறைக்கவில்லை: அதிகாரிகள் தகவல்

சென்னை: ‘‘பருவமழை காரணமாக நெல் விளைச்சல் குறைவாக இருந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கும் பயிர்க்கடன் குறைக்கவில்லை’’ என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிசான் அட்டைகள் பெற்ற விவசாயிகள் பயிர் செய்வதற்காக ஏற்படும் செலவுகளுக்காக ஏற்ப மாநில தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிதி அளவின்படி 7சதவீத வட்டியுடன் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. பிணைய பாதுகாப்பு இல்லாமல் ரூ1.6 லட்சம் வரையிலும், பிணையத்துடன் ₹1.6 லட்சத்திற்கு அதிகமாகவும் கடன் வழங்கப்படுகிறது.

கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தும் நேரங்களில், விவசாயிகள் வட்டி செலுத்த வேண்டியதில்லை. காவிரி டெல்டா பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளுக்கு பயிர் கடன் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும் சாகுபடி செலவு என்பது நிதி அளவு நிர்ணயிக்கப்படுவதால் கூடுதலாக கடன் வழங்க முடிகிறது. கடன் பெறுவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு, கடன்களின் அளவு அதிகரிக்க வழி வகுக்குத்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 30,000 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் குறைக்கவில்லை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cooperative Department ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...