×

55 மாணவர்கள் மாயமான வழக்கு பாக். பிரதமருக்கு கோர்ட் சம்மன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 55 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த வழக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மோசின் அக்தர் கயானி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மோசின் அக்தர்,‘‘இந்த விவகாரத்தில், இடைக்கால பிரதமர் வரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’’ என்றார். இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டாம் என வலியுறுத்தினார். இதை கேட்ட நீதிபதி,‘‘பிரதமர், அமைச்சர்களை ஆஜராக உத்தரவிடுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்த வழக்கை ஒரு ஜோக் போல் அனைவரும் நினைக்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும்படி ஐநாவிடம் ஒப்படைத்தால் நாட்டிற்கு அவமானமாக இருக்காதா? என்று கேட்டார்.

The post 55 மாணவர்கள் மாயமான வழக்கு பாக். பிரதமருக்கு கோர்ட் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Pak. Court ,Islamabad ,Pakistan ,Balochistan ,Islamabad High Court ,Judge ,Mosin Akhtar… ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...