×

‘மிஸ்டு கால்’ பிரச்சாரம் ராஜஸ்தான் காங்.தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் நவ.25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால், காங்கிரஸ் அளித்த 7 உத்தரவாதங்களின் பலன்களைப் பெற, மொபைல் எண்ணில் மிஸ்டு கால்களை வழங்குமாறு காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ புகார் அளித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்குள் பதிலளிக்குமாறு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் நாளிதழ்களில் அரசியல் விளம்பரங்களை செய்திகளாக மறைத்து வெளியிட்டதாக கூறி பா.ஜ அளித்த புகாருக்கு இன்று மாலை 3 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் 2வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

The post ‘மிஸ்டு கால்’ பிரச்சாரம் ராஜஸ்தான் காங்.தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Rajasthan Congress ,New Delhi ,Rajasthan ,Congress ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி வங்கிகள், தபால்...